in

Alaipayuthey – Evano Oruvan | Solo Singing BairaviGopi | Smule Tamil



⭐⭐⭐⭐⭐விவசாயி⭐⭐⭐⭐
நம்ம கண்ணுக்கு தெரிஞ்சு பாலுட்டி தாலாட்டி சீராட்டி வளர்ப்பவள் நம்ம பெத்த தாயி
நம்ம கண்ணுக்கு தெரியாம நம்மள சோறூட்டி வளர்க்கும் இன்னொரு தாயி தான் நம்ம விவசாயி

நம்ம எல்லோரையும் வாழவைக்கும் அப்படிப்பட்ட உயர்ந்த விவசாயி இருட்டுல இருக்கறப்போ …நாம வெளிச்சத்துல உட்கார்ந்து விளையாட்டா சாப்பிட்டுட்டு இருக்கோம்!

நம்ம நாட்டு விவசாயிங்களுக்கு இயற்கையின் இடர் ஒருபுறம்…..அதனால கடன் கட்ட இயலாது வங்கிகள் தரும் துயர் மறுபுறம்….இருதலை கொள்ளி எறும்பாய் தவித்து துடித்து இதுவரை இன்னுயிர் மாய்த்து கொள்ள தற்கொலை செய்த ஏழை விவசாயிகளின் எண்ணிக்கை எண்ணிலடங்கா! இது இந்தியாவின் தற்கொலையுண்டோரின் கிட்டத்தட்ட 11,2% சதவிகதம் என எண்ணும்போது பதறி போகிறது மனம்!

அந்த ஏழை விவசாயிகளின் இன்னுயிர்களுக்கு இந்த பாடல் தனை காணிக்கை ஆக்குகிறோம்!

இதோ அந்த வயல்காட்டில் நாற்று கீற்று காற்றலைகளில் தன் பரம்பரையாவது இனி நலம் வளம் காணுமா என ஆறுதல் தேடும் அவனின் ஆத்மா சாந்தி கொள்ள இந்த சங்கீதம் சாமரம் வீசட்டும்! இனி இந்த நாடு நம் விவசாயிகளுக்காக பேசட்டும்!

இப்ப அந்த விவசாயிகளின் வேதனையின் வெளிப்பாட இந்த பாடலை பாடுகிறோம்! இதுவே கடைசி வேதனையின் ஒலியாக இருக்கட்டும்!

இனியாவது ஏர் உழவனின் எங்கள் ஏழை விவசாயிகளின் வாழ்வில் ஒளி வீசட்டும்!
நம்பிக்கையோடு நாங்கள்!
Song sung by Smule singer #BairaviGopi and lyrics by #Rasarasan

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments